அரச நிர்வாகம் கற்க சீனாவுக்குப் பயணமானார் கோத்தா
சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச நேற்று முன்தினம் அதிகாலையில் சீனாவுக்குப் பயணமாகியுள்ளார். சீனாவின் யுனான் பல்கலைக்கழகத்தில் அரச நிர்வாகம் மற்றும் பொருளாதார முகாமைத்துவ கற்கைநெறி ஒன்றைத் தொடர்வதற்காகவே, கோத்தாபய ராஜபக்ச சீனா சென்றுள்ளார் என்று கூறப்படுகிறது. சீனாவின் பல்கலைக்கழகம் ஒன்றில் மூன்றாண்டு அரசியல் கற்கைநெறி ஒன்றைக் கற்பதற்கு கோத்தாபய ராஜபக்சவுக்கு சீன அரசாங்கம் அழைப்பு விடுத்திருப்பதாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் செய்திகள் வெளியாகியிருந்தன. எனினும், யுனான் பல்கலைக்கழகத்தில் கோத்தாபய ராஜபக்ச தொடரவுள்ள கற்கைநெறி எவ்வளவு காலம் நீடிக்கும் என்ற விபரங்கள் வெளியாகவில்லை.
Post a Comment