தமது கட்சியின் ஒழுக்க விதிகளை மீறிச் செயற்பட்ட உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்தார். “தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஈபிடிபி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றுக்கு ஆதரவு வழங்கியமை தொடர்பிலேயே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்காக சம்பந்தப்பட்ட உறுப்பினர்களுக்கு எழுத்துமூலமான கடிதங்கள் அனுப்பி வைக்கப்படுள்ளன. அவர்களைப் பிரதேச சபை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவது, கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து என்பன தொடர்பாக சட்ட ஆலோசனை பெற்று வருகின்றோம். ஆலோசனையின் பிரகாரம் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்' என்று அவர் கூறியுள்ளார். வடக்கின் உள்ளூராட்சி சபைகளில் ஈபிடிபியுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஆட்சி அமைத்து வருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் குற்றம்சாட்டி வந்த நிலையில், கிழக்கில் ஈபிடிபி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து இதுவரை இரண்டு சபைகளில் ஆட்சி அமைக்க முன்னணி உறுப்பினர்கள் ஆதரவு வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment