பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில்,கண்டியில் நேற்று(31) ஆரம்பமான பேரணியானது இன்றைய தினம் (1) நெலும்தெனியவை வந்தடைந்துள்ளது. ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் பிரதம செயலாளர், சட்டத்தரணி மைத்திரி குணரத்னவின் தலைமையில் இந்த பேரணி முன்னெடுக்கப்படுகின்றது. புதிய மாற்றத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த பேரணி முன்னெடுக்கப்படுவதாக, மைத்திரி குணரத்ன தெரிவித்துள்ளார். இதேவேளை, குறித்த பேரணியின் போது, சட்டத்தரணி மைத்திரி குணரத்ன நேற்றைய தினம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு கண்டி நீதவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். மைத்திரி குணரத்னவின் வாகனத்திலிருந்து கைத்துப்பாக்கிகள் இரண்டு மீட்கப்பட்டமையையடுத்தே, இவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment