Header Ads

test

கடந்த 03 மாதங்களில் 720 முறைப்பாடுகள்


கடந்த மூன்று மாத காலத்தில் சமூக ஊடகங்கள் சம்பந்தமாக 720 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு கூறியுள்ளது. அந்த முறைப்பாடுகளில் அதிகமானவை பேஸ்புக் சம்பந்தமாக கிடைத்திருப்பதாக அந்த பிரிவின் ஊடகப் பேச்சாளர் பாதுகாப்பு பொறியிலாளர் ரொஷான் சந்திரகுப்த கூறினார். அந்த முறைப்பாடுகளில் நூற்றுக்கு 75 வீதமானவை போலிக் கணக்குகளை இயக்கிச் செல்வது தொடர்பானவை என்று கணினி அவசர நடவடிக்கை பிரிவு கூறியுள்ளது. டுவிட்டர், இன்ஸ்டகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் சம்பந்தமாகவும் கடந்த மூன்று மாத காலத்தில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. அந்த முறைப்பாடுகள் சம்பந்தமாக தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு கூறியுள்ளது.

No comments