Header Ads

test

அரச பாடசாலைகளுக்கு 06ம் திகதி முதல் விடுமுறை


அரச மற்றும் அரச அங்கீகாரத்துடன் இயங்குகின்ற சிங்கள மற்றும் இந்து பாடசாலைகளின் முதலாவது தவணை எதிர்வரும் 06ம் திகதி வௌ்ளிக்கிழமை நிறைவடைவதாக கல்வியமைச்சு கூறியுள்ளது. அந்தப் பாடசாலைகள் முதலாம் தவணை விடுமுறையின் பின்னர் மீண்டும் எதிர்வரும் 23ம் திகதி கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படும் என்று கலவியமைச்சு கூறியுள்ளது. இதேவேளை முஸ்லிம் பாடசாலைகளுக்கு எதிர்வரும் 11ம் திகதி புதன்கிழமை முதல் முதலாவது தவணைக்கான விடுமுறை வழங்கப்பட்டு மீண்டும் எதிர்வரும் 16ம் திகதி கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments