நம்பிக்கையில்லாப் பிரேரணையில் பிரதமருக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த பிரேரணைகளில் 10 விடயங்களை நிறைவேற்றுவதற்கு பிரதமர் உடன்பாடு தெரிவித்தாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்களநாதன் தெரிவித்துள்ளார். தாம் பிரேரணைகளை பிரதமரிடம் முன்வைத்த போது அவற்றில் சிலவற்றுக்கு பிரதமர் மறுப்புத் தெரிவித்ததாகவும் இதன்போது பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களுக்கும் பிரதமருக்கும் இடையில் சூடான் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார். நீண்ட பேச்சுவார்த்தையின் இறுதியில் 10 பிரேரணைகளை நிறைவேற்றுவதாக பிரதமர் உடன்பட்டார் எனவும் செல்வம் அடைக்களநாதன் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment