Header Ads

test

100 அடியில் வீழ்ந்து விபத்துக்குள்ளான சிற்றூர்தி

லிந்துலை காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை டயகம பிரதான வீதியில் லிந்துலை நாகசேனை பகுதியில் இன்று (18) மாலை 3 மணியளவில் சிற்றூர்தி ஒன்று வீதியை விட்டு விலகி 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியது.

குறித்த சிற்றூர்த்தியில் பயணித்த சாரதியும், மற்றொருவரும் கடும்காயங்களுக்குள்ளாகிய நிலையில் காவல்துறையினால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

லிந்துலை பகுதியிலிருந்து அக்கரப்பத்தனை பசுமலை பகுதியில் அமைந்துள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மதிய உணவுகளை கொண்டு சென்று இறக்கிவிட்டு மீண்டும் லிந்துலையை நோக்கி வரும் பொழுதே குறித்த சிற்றூர்தி விபத்துக்குள்ளாகியுள்ளது.

தூக்கம் ஏற்பட்டதனால் வாகன சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாது போனதாக காவல்துறை குறித்த விபத்து குறித்து செய்தி வெளியிட்டுள்ளது.




No comments