வட தமிழீழம், முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு சிறிலங்கா காவல்துறை பிரிவுக்குட்ப்பட்ட சுதந்திரபுரம் மத்தி பகுதியில் வசித்துவந்த 15 வயதுடைய சிறுவன் ஒருவனை காணவில்லை என உறவினர்களால் புதுக்குடியிருப்பு சிறிலங்கா காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து மேலும் தெரியவருவதாவது. புதுக்குடியிருப்பு சிறிலங்கா காவல்துறை பிரிவுக்குட்ப்பட்ட சுதந்திரபுரம் கிராம அலுவலர் பிரிவின் சுதந்திரபுரம் மத்தி 40 ஏக்கர் பகுதியை சேர்ந்த 15 வயதுடைய சத்தியசீலன் கிருஜன் என்பவர் 22 ம் திகதி உடையார்கட்டு பகுதியில் உள்ள கணணி கற்கை நிலையத்துக்கு சென்று வந்து சுதந்திரபுரம் சந்தியில் அமைந்துள்ள சிறிய தந்தையில் வீட்டில் உணவருந்திவிட்டு 2 மணியளவில் வீடு செல்வதாக தெரிவித்து விட்டு சென்றவர் வீடு வந்து சேரவில்லை என தந்தையார் தெரிவித்தார். இதனை தொடர்ந்து தந்தையாரால் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதை அடுத்து சிறிலங்கா காவல்துறை விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.இதேவேளை இவர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் தந்தை சத்தியசீலன் அவர்களுடைய 0774769824 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு தகவல் தருமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
Post a Comment