Header Ads

test

முல்லைத்தீவைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு


யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த கல்வி கற்று வந்த முல்லைத்தீவைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முள்ளியவளை கிழக்கு, 3 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சிவநேசன் கஸ்தூரி (வயது 15) என்னும் சிறுமியே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். கடந்த 18 ஆம் திகதி யாழ்ப்பாணம், கல்வியங்காட்டு பகுதியில் உறவினர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்த குறித்த சிறுமி மர்மமான முறையில் கடத்திச் செல்லப்பட்டதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதியப்பட்டுள்ளது என யாழ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சிறுமி தொடர்பில் எவ்வவித தகவல்களும் இதுவரை கிடைக்கவில்லை என பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில் முள்ளியவளையில் வசிக்கும் குறித்த சிறுமியின் தாயார் சிறுவர் பாதுகாப்பு பிரிவினரிடம் தனது 15 வயது மகளை கண்டுபிடித்து தரும்படி நேற்று கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments