Header Ads

test

பூரண அமைச்சரவை மாற்றம் 23ம் திகதிக்குப் பின்னர்


கூட்டு அரசாங்கத்தின் அடுத்த அமைச்சரவை மாற்றம் எதிர்வரும் 23ம் திகதிக்குப் பின்னர் நடைபெறும் என்று தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கத் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.

இதற்கான மீளாய்வு நடவடிக்கைகள் தற்போது ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் நடைபெற்று வருகிறது.

இதன்படி தயாரிக்கப்படுகின்ற அமைச்சுப் பொறுப்புகளின் மாற்றங்கள் குறித்த அறிக்கை, எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கையளிக்கப்படவுள்ளது.

அவர்களின் அனுமதியுடன் பூரண அமைச்சரவை மாற்றம் நிகழும் என்று அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன

No comments