Header Ads

test

சி.சு.க, ஐ.ம.சு.கூ செயலாளர்கள் உட்பட 26 பேர் வாக்களிப்பின் போது சபையில் இல்லை

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பின் போது 26 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பிலிருந்து தவிர்ந்து கொண்டனர். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. அத்துடன், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பெரும்பாலான அமைச்சர்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. மக்கள் விடுதலை முன்னணி பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தது. கூட்டு எதிர்க் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அரசாங்க தரப்பு அமைச்சர்கள் பலரும் இப்பிரேரணைக்கு ஆதரவு வழங்கினர்.

No comments