Header Ads

test

28 வருடங்களின் பின்னா் திறக்கப்பட்டது காங்கேசன்துறை, பொன்னாலை வீதி!


பருத்தித்துறை - காங்கேசன்துறை - பொன்னாலை வீதி 28 வருடங்களின் பின்னா் மக்களின் பாவனைக்கு கட்டுப்பாட்டுடன் இன்றையதினம்(13-04-2018) திறந்து வைக்கப்பட்டது.
நாட்டில் இடம்பெற்ற யுத்த சூழ்நிலைகளின் காரணமாக 1990 ஆம் ஆண்டு மூடப்பட்ட பருத்தித்துறை - காங்கேசன்துறை - பொன்னாலை வீதி இன்றையதினம் மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்ட நிநலையில் இந்த வீதியின் ஊடாக காலை 6 மணி தொடக்கும் இரவு 7 மணிவரை பொது மக்கள் சகல வாகனங்களிலும் பயணிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதேவேளை, பருத்தித்துறை - பொன்னாலை வீதியின் ஒரு பகுதி இதுவரை காலமும் இ.போ.ச பேருந்து சேவைக்காக கடந்த உள்ளூராட்சித் தேர்தலுடன் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த 683 ஏக்கர் நிலம் இன்றையதினம்(13-04-2018) மீள்குடியேற்றத்திற்காக மக்களிடம் மீள கையளிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 5 கிராம சேவகர் பிரிவுகளைச் சேரந்த 12 நலன்புரி நிலையங்களில் வாழ்ந்து வரும் 964 குடும்பங்களுக்கு சொந்தமான 683 ஏக்கர் காணிகள் இன்றையதினம் விடுவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் படையினர் ஆக்கிரமித்து வைத்திருக்கும் பொது மக்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவிக்குமாறு தொடர்ச்சியாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றதன் அடிப்படையில் படிப்படியாக காணிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments