Header Ads

test

2ஆம் உலகப் போரின் போது மூழ்கிய இங்கிலாந்தின் கப்பல் இலங்கையில் மீட்பு!

இரண்டாம் உலகப் போரின் போது இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கடிக்கப்பட்ட இங்கிலாந்து நாட்டின் பயணிகள் கப்பலின் பாகங்களை சிறீலங்காக் கடற்படையினர் மீட்டுள்ளனர்.

1942 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் உலகப் போரின் போது இங்கிலாந்து நாட்டின் தனியாருக்கு சொந்தமான இப் பயணிகள் கப்பலான ''எஸ்.எஸ் சகாயிங்'' என்ற கப்பலை ஜப்பானின் வான்படையினர் குண்டு போட்டுத் தாக்கியளித்தனர். குண்டு வீச்சுக்கு இலக்காகிய குறித்த கப்பல் கடலில் மூழ்கியிருந்தது.

452 அடி நீளமான அக்கப்பலின் உடைந்த பாகங்கள் திருகோணமலை துறைமுகத்தில் 35 அடி ஆழத்தில் மூழ்கி கிடப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து குறித்த கப்பலை மீட்கும் பணியில் சிறீலங்காக் கடற்படையினர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கினர்.

75 ஆண்டுகள் கடந்த நிலையில் நேற்று சனிக்கிழமை குறித்த கப்பல் மீட்கப்பட்டுள்ளது.

No comments