3 வயது குழந்தையைப் பாதுகாத்த நாய்! குவியும் பாராட்டுகள்
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தைச் சோ்ந்த மூன்று வயது குழந்தையான அரோரா விளையாட்டுத் தனமாக வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். சரியாக காது கேட்காத மற்றும் கண் குறைபாடு கொண்ட மேக்ஸ் என்னும் அவா்களது குடும்ப நாய் அரோராவை பின் தொடா்ந்து சென்றுள்ளது. அந்த குழந்தை வீடு திரும்பாததையடுத்து அக்குழந்தையின் உறவினா்கள் குழந்தையை தேடத் தொடங்கினா்.
தங்களின் வீட்டில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டா் தூரத்தில் உள்ள இடத்தில் இருந்து அரோரா கத்தியதை கேட்டதாக குழந்தையின் பாட்டி தெரிவித்துள்ளார். நான் மலையை நோக்கி கத்திக் கொண்டே சென்றேன். நான் மலையின் உச்சியை அடைந்தவுடன் அங்கு வந்த நாய், அரோரா இருக்கும் இடத்திற்கு என்னை அழைத்துச் சென்றது என்று அவர் தெரிவித்துள்ளார். சனிக்கிழமை காலை ஒரு மலைப்பகுதியில் உறவினா்கள் கண்டுபிடிக்கும் வரை (சுமார் 16 மணி நேரம்) குழந்தையுடன் நாய் தங்கியுள்ளது.
அன்று இரவு வெப்ப நிலை 15 டிகிரி நிலவிய நிலையில், குழந்தை நாயுடன் சோ்ந்து பாறையொன்றின் அடியில் தங்கியிருந்தது என்று அரோராவின் உறவினா்கள் தெரிவித்துள்ளனா். குழந்தையை தேடுவதற்கான பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட அவசரகால பணியாளா்களும், தன்னார்வலா்களும் ஈடுபட்டனா். நாய் மேக்சின் செயலை பாராட்டிய காவல் துறையினா் அதற்கு கவுரவ போலீஸ் என்று பெயரிட்டனா். இரவு முழுவதும் குழந்தையை பாதுகாத்த நாய்க்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.

Post a Comment