முல்லைத்தீவு, சாலைப் பகுதியில் அதிகாலை 1.30 மணியளவில் மீனவர்களுக்கு இடையில் நடந்த மோதலில் 3 பேர் காயமடைந்தனர். வெளிமாவட்டங்களில் இருந்து வந்து தொழில் செய்யும் மீனவர்களே மோதிக்கொண்டனர் என்று உள்ளுர் மீனவர்கள் தெரிவித்தனர். மன்னார் வங்காலையைச் சேர்ந்த செ.மரியநாயகம் (வயது-26), கி.டார்வின் (வயது-35), ஆ.றுயான் (வயது-29) ஆகியோரே காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவுப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகத்தின் அடிப்படையில் இருவரைக் கைது செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.
Post a Comment