Header Ads

test

மெக்காவுக்குச் சென்ற 4 பிரித்தானியர்கள் விபத்தில் பலி!

வடக்கு இங்கிலாந்தில் உள்ள பிளாக்பர்ன், பிரஸ்டன் நகரங்களை சேர்ந்தவர்கள் சவுதிஅரேபியாவுக்கு சென்று இருந்தனர். அங்கு மெக்கா நகருக்கு புனித யாத்திரையாக ஒரு பஸ்சில் புறப்பட்டு சென்றனர்.

செல்லும் வழியில் அவர்கள் சென்ற பஸ் எதிரே வந்த பெட்ரோல் டேங்கர் லாரி மீது பயங்கரமாக மோதியது. இதனால் பஸ் பலத்த சேதம் அடைந்தது.

அதில் பஸ்சில் பயணம் செய்த 4 பேர் அதே இடத்தில் பலியாகினர். 12 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இறந்தவர்கள் அனைவரின் உடல்களையும் சவுதிஅரேபியாவில் இருந்து அனுப்ப இங்கிலாந்து அதிகாரிகள் நடவடிக்கை மேற் கொண்டுள்ளனர்.

No comments