Header Ads

test

கண்டி கலவரம் : மேலும் 4 பேர் கைது, இன்று நீதிமன்றில் ஆஜர்- பொலிஸ்


கண்டி, திகன பிரதேசத்தில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் முன்னாள் இராணுவ உத்தியோகத்தர் உட்பட நான்கு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். பயங்கரவாத குற்றத் தடுப்புப் பிரிவினர் இக்கலவரம் தொடர்பில் ஆரம்பத்தில் 10 பேரைக் கைது செய்தனர். இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கிடைக்கப் பெற்ற தகவல்களை வைத்து மேலும் நான்கு பேரை கைது செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கைத்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ரஜவல்ல கோணவல பிரதேசத்தில் வசிக்கும் பிரசன்ன அபேவர்தன எனும் சந்தேகநபர் திகனயில் கடைகளுக்கு தீ வைத்தல், பள்ளிவாயல்களுக்கு தீ வைத்தல் போன்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இன்று (2) தெல்தெனிய மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். கட்டுகஸ்தொட்ட கஹல்லே பகுதியில் வசிக்கும் சுதினாரகெதர சாந்த பிரியந்த எனும் பெயருடைய மற்றை சந்தேகநபர் முச்சக்கர வண்டி திருத்தும் தொழிலில் ஈடுபடக் கூடிய ஒருவர். இவர் மடவல பிரதேசத்தில் கடைகளுக்கு தீ வைத்து சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் எதிர்வரும் 10 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். புஜாபிட்டிய அம்பதன்ன கடை மற்றும் பள்ளிவாயல் என்பவற்றுக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அம்பதன்ன பிரதேசத்தில் வசிக்கும் திஸாநாயக்க முதியன்சலாகே சம்பத் சூரிய பண்டார என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இதுவரையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வில்லையெனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார். ஹேரத் முதியன்சலாகே பியதிஸ்ஸ எனும் பெயருடைய முன்னாள் இராணுவ உத்தியோகத்தர், புஜாபிட்டிய அம்பதன்ன பிரதேச கடைகள், பள்ளிவாயல் என்பவற்றுக்கு தீ வைத்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கலகெதர மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

No comments