அர்ஜூன் அலோசியஸ், கசுன் பலிசேன குறித்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு
கடந்த 12 ஆம் திகதி கோட்டை நீதவான் லங்கா ஜெயரத்னவிடம் அவர்களை முன்னிலைப்படுத்திய போது இன்று வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
மத்திய வங்கியின் முறி விநியோக மோசடி விவகாரம் தொடர்பில் கடந்த பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி அர்ஜூன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இதனிடையே, பிணை முறி விநியோக மோசடி விவகாரம் தொடர்பில் பிரதான சந்தேக நபரான மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment