காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. முழு அடைப்பு காரணமாக தமிழக - கர்நாடக பேருந்துகள் எல்லையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடகாவிற்கு செல்லும் தமிழக அரசு பஸ்களும் அதே போன்று சத்தியமங்கலத்திற்கு இயக்கப்படும் கர்நாடகா மாநில அரசு பஸ்களும் இயக்கப்படவில்லை. தமிழகத்தில் இருந்து பெங்களூரு செல்லக் கூடிய அரசு பேருந்துகள் ஓசூரில் நிறுத்தப்பட்டுள்ளன. தமிழகத்திற்கு இயக்கப்படும் கர்நாடக அரசு பேருந்துகள் அத்திப்பள்ளியில் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் கன்னியாகுமரியில் இருந்து இயக்கப்படும் கேரள அரசு பஸ்கள் களியக்காவிளையில் நிறுத்தி வைக்கப்பட்டவன.
Post a Comment