Header Ads

test

நுரையீரல் புற்றுநோயை பாதிக்கப்பட்டவர்களின் வாழ் நாளை அதிகரிக்கும் புதிய சிகிற்சை!

கீமோதெரபியுடன். இம்யுனோதெரபியையும் இணைத்து சிகிச்சை அளித்தால் புற்றுநோயாளிகளின் வாழ்நாளை அதிகரிக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட ஆய்வறிக்கையில்,

'இம்யுனோதெரபியின் போது அளிக்கப்படும் பெம்பிராலிசுமா மருந்தை கீமோதெரபி சிகிச்சையுடன் வழங்கும் போது நுரையீரல் புற்றுநோயாளிகள் இறப்பு விகிதத்தை பாதியாக குறைக்கிறது. கீமோதெரபி சிகிச்சையை மட்டும் தனியாக செய்வதை விட இது அதிக பலன் அளிக்கிறது. நோயாளிகளை அதிக நாள் வாழ வைக்கிறது'.

இந்த சிகிச்சை முறை 616 நோயாளிகளிடம் சோதனை செய்யப்பட்டு இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகில் உள்ள நுரையீரல் புற்றுநோயாளிகள் அதிக அளவில் பயன்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments