Header Ads

test

அரசியலமைப்பு சபைக்கு ஆபத்து இல்லை!


நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் ஒத்திவைக்க ப்பட்டமையால், புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்கான அரசியலமைப்பு சபையின் செயற்பாடுகளுக்கு எவ்விதமான பாதிப்புகளும் ஏற்படாது என்று நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்தார். “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், நாடாளுமன்ற கூட்டத்தொடர், அதிவிசேடமான வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக ஒத்திவைக்கப்பட்டதன் பின்னர், அரச நிறுவனங்கள் பற்றிய நாடாளுமன்றத் தெரிவுக்குழு, அரச கணக்குகள் பற்றிய நாடாளுமன்றத் தெரிவுக்கு உள்ளிட்ட சுமார் 10க்கும் மேற்​பட்ட குழுக்களின் செயற்பாடுகள் இரத்தாகின. இந்நிலையில், அரசியலமைப்பு சபையின் செயற்பாடுகள் தொடர்பில் கருத்துரைத்த அவர், “இந்த அரசியலமைப்பு சபையானது நாடாளுமன்ற தெரிவுக் குழுவாகச் செயற்படுகின்றது. ஆகையால், அந்தக் குழுவுக்கு எவ்விதமான அழுத்தங்களும் ஏற்படாது” என்றார். பிரதமரே, அரசியலமைப்பு சபையின் தலைவராவார். எட்டாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர், எதிர்வரும் 08ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், அரசியலமைப்பு சபையானது மீண்டும் கூடும் என்றும் அறிய முடிகின்றது

No comments