Header Ads

test

நந்திக்கடல் கண்காணிப்பு முகாமைக் கைவிட்டது இராணுவம்!


முல்லைத்தீவு - நந்திக்கடல் பகுதியில் இருந்த கண்காணிப்பு முகாம் மற்றும் உணவகம் என்பன இராணுவத்தினரால் அகற்றப்பட்டுள்ளன.
இறுதி யுத்தத்தின் போது வட்டுவாகல் பகுதியை கைப்பற்றிய இராணுவத்தினர் முல்லைத்தீவு-பரந்தன் பிரதான வீதிப் போக்குவரத்தை கண்காணிப்பதற்காக இந்த முகாமை நந்திக்கடல் பகுதியில் அமைத்திருந்தனர்.
அதனருகே உணவகம் ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. ஒன்பது வருடங்களின் பின்னர் இந்த கண்காணிப்பு முகாம் இராணுவத்தினரால் நேற்று அகற்றப்பட்டுள்ளது.

No comments