Header Ads

test

வாயில் போலி நாணயத்தாள்களை மென்ற நான்கு இளைஞர்கள் கைது!

ஓட்டமாவடியில் போலி நாணயத்தாள்களுடன் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

கைதானவர்கள் பொலன்னறுவை சுங்காவில் பகுதியைச் சேர்ந்த 18 – 26 வயதுக்குட்பட்ட நான்கு இளைஞர்கள் என்றும் அவர்களிடமிருந்து பதினொரு போலியான 5,000 ரூபாய் நாணயத்தாள் கைப்பற்றப்பட்டதாகவும் தொிவித்துள்ளனர்.

ஓட்டமாவடி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் உந்துருளிக்கு  எரிபொருள் நிரப்பி விட்டு நாணயத்தாளை வழங்கும் எரிபொருள் நிலைய ஊழியர் இது போலி நாணயத்தாள் என அடையாளம் கண்டபின்னர் உடனடியாக காவல்துறையின் தொலைபேசிக்கு தகவலை வழங்கினார்.

குறித்த எரிபொருள் நிலையத்திற்கு காவல்துறையினர் வந்தபோது அவர்களைக் கண்டதும் குறித்த இளைஞர்கள் போலி நாணயத்தாள்களை வாய்க்குள் போட்டு மென்றுள்ளனர். எனினும் குறித்த பணத்தை காவல்துறையினர் கைப்பற்றியதுடன் குறித்த நான்கு இளைஞர்களையும் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments