அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானி நெர்சஸ் கிரிக் கிகோரியன். உலகிலேயே முதன் முறையாக அணு குண்டு தயாரித்தவர். இவர் கடந்த 18-ந்தேதி மரணம் அடைந்தார். இவருக்கு வயது 97. இவர் நியூ மெக்சிகோவில் லாஸ் அல்மோஸ் நகரில் குடும்பத்துடன் தங்கியிருந்தார். இவரது பெற்றோர் ஆர்மீனியாவை சேர்ந்தவர்கள். கடந்த 1921-ம் ஆண்டு துருக்கியில் அகதிகளாக தஞ்சம் அடைந்தனர். அங்கு இவர் ரோட்டோரம் பிறந்தார். பின்னர் இவரது குடும்பத்தினர் அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்து நியூமெக்சிகோ மாகாணத்தில் குடியேறினர். அகதியாக வந்த இவர் பிற்காலத்தில் வெடிகுண்டு தயாரித்து மேதை ஆனார்.
Post a Comment