Header Ads

test

யாழில் சிறை உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல்! மூவர் காயம்!

யாழ். நக­ரில் நேற்­றி­ரவு சிறைச்­சாலை உத்­தி­யோ­கத்­தர்­கள் தாக் கப்பட்டதுடன் அவர்­கள் பய­ணித்த வாக­ன­மும் அடித்து நொறுக் கப்பட்டது.

குறித்த தாக்குதல் சம்பவம் யாழ்ப்பாணம் சத்திரச் சந்திக்க அண்மையில் இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இப்பகுதியில் அமைந்துள்ள மதுபான நிலையத்தில் நின்ற சிலரே குறித்த சிறை உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதன்போது மூன்று சிறை உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளனர். வாகனதின் கண்ணாடிகளும் அடித்து நொருக்கப்பட்டுள்ளது.

சிறை உத்தியோகத்தர்கள் வாங்குவதற்காக வாகனத்தை நிறுத்தி உணவ வாங்குவதற்காக சென்றபோது அருகாமையில் இருந்த மதுக்கடையில இந்தவர்கள் சிலர் வந்து தாக்கியுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்­ப­வ இடத்திற்கு காவல்துறையினர், சிறைச்­சாலை உத்தியோகத்தர்கள், சிறப்பு அதி­ர­டிப்­ப­டை­யி­னர் விரைந்தனர். பின்னர் சந்தேகத்தின் பெயரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காயமடைந்த சிறை உத்தியோகத்தர்கள் யாழ்ப்பாண பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் இச்சம்பவம் குறித்து இதுவரை உத்தியோகத் தகவல்கள் வெளியாகவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

No comments