Header Ads

test

காதலியை சரமாரியாக வெட்டிய காதலன்

காதலி பிறிதொரு நபருடன் காதல் தொடர்பினை பேணியதால் ஆத்திரமுற்ற காதலன் தனது லொறியினால் காதலியின் வாகனத்தை மோதி காதலியை காயமடையச் செய்துவிட்டு கூரிய கத்தியினால் சரமாரியாக வெட்டியதில் காதலியும் அவரின் தாயும் படுகாயமடைந்த நிலையில் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது  கம்பளை பொலிஸார் சந்தேக நபரை கைது செய்து விசாரணையின் பின்னர் கம்பளை மாவட்ட நீதிமன்ற நீதிவான் முன் நிலையில் ஆஜர்படுத்திய பொழுது குறித்த நபரை எதிர்வரும் மே மாதம் 2 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

கம்பளை மாவதுற பிரதேசத்தில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
புஸல்லாவ பகுதியைச் சேர்ந்த சந்தேக நபருக்கு மாவதுறையில் வசித்துவந்த மேற்படி பெண்ணுக்குமிடையில் காதல் தொடர்பு இருந்து வந்துள்ளது. குறித்த பெண் கணவனை பிரிந்து வாழ்ந்து வருபவர் என்று தெரிவிக்கப்படுகிறது.குறித்த பெண் அண்மைக்காலமாக பிரிதொரு நபருடனும்  காதல் தொடர்பினை பேணி வருவது தொடர்பாக தெரிந்து கொண்ட சந்தேக நபர் சம்பவ தினமான திங்கட்கிழமை தனது லொறியை எடுத்துக் கொண்டு காதலியை தேடிச் சென்ற சந்தர்ப்பத்தில் காதலி தனது வாகனத்தில்  எதிரே  வந்து கொண்டிருப்பதனை அவதானித்துள்ளார்.

 அந்த வாகனத்தை தனது லொறியினால் மோதி காதலியை காயமடையச் செய்ததுடன் 1500 ரூபா கொடுத்து வாங்கி  மறைத்து வைத்திருந்த கூரிய கத்தியினால் சரமாரியாக வெட்டியுள்ளார்.  இச்சந்தர்ப்பத்தில் தடுக்க முற்பட காதலியின் தாயும் படுகாயமடைந்த நிலையில் கம்பளை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

No comments