தியாகங்களிற்காகவல்ல இப்பொழுது மாலை?
ஒருபுறம் முன்னாள் மற்றும் இந்நாள் அரசியல்வாதிகள் மாலைகளிற்கு அலைந்து திரிய மறுபுறம் தேசத்திற்காக இரத்தம் சிந்திய போராளிகளது அநாதரவான மரணங்கள் மக்களை அதிரவைத்துவருகின்றது.
தேசத்திற்காக தியாகங்களைச் செய்த முன்னாள் போராளியும் சமூகப் பற்றாளருமான ச.பிரதீபனின் இறுதி வணக்க நிகழ்வு இன்று மதியம் முல்லை. முத்தையன்கட்டிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. தொடர்ந்து இறுதி வணக்கக் கூட்டம் முத்தையன்கட்டு இளந்தளிர் கல்வி நிலையத்தில் உணர்வுபூர்வமாகவும் எழுச்சியுடனும் நடைபெற்றது. இதில் பல நூற்றுக்கணக்கான பொதுமக்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர். மேலும் முன்னாள் போராளிகள், சமூக செயற்பாட்டாளர்கள் போன்றோரும் கலந்துகொண்டனர்.
பிரதேச இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து மிகவும் உணர்வெழுச்சியுடன் இறுதி வணக்கக் கூட்டத்தையும் இறுதிப் பவனியையும் நடத்தியிருந்தனர்.
ஆனால் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல் பிரதிநிதிகள் பலருக்கும் எட்டிப்பார்த்திருக்க கூட நேரமிருக்கவில்லை.
அவர்கள் பலரும் தற்போது கூடிய மாலைகளை கழுத்தில் வீழும் இடங்களை நோக்கி அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றனர்.
Post a Comment