Header Ads

test

தடம் புரண்டது தொடருந்து!


பதுளையில் இருந்து கொழும்பை நோக்கி பயணித்த அஞ்சல் தொடருந்து உலப்பனை, பல்லேகம பகுதியில் தடம் புரண்டதால் தொடருந்து சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தொடருந்துக் கட்டுபாட்டு சபை தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் இன்று (27) அதிகாலை 1.30 மணி அளவில் தடம் புரண்டுள்ளதாகவும் இதனால் சில மணி நேரம் தொடருந்து சேவை பாதிக்கபட்டிருந்தோடு தற்பொழுது அஞ்சல் சேவை வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

இதேவேளை, கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணிக்கும் தொடருந்து உலப்பனை, பல்லேகம வரை பயணிக்கும் என்றும் பல்லேகமையில் இருந்து மாற்று தொடருந்து ஊடாக பயணிகள் பதுளை நோக்கி செல்வதாகவும் தொடருந்து கட்டுபாட்டு சபை தெரிவித்துள்ளது.

மேலும், பதுளையில் இருந்து கொழும்பை நோக்கி பயணிக்கும் தொடருந்து உலப்பனை பல்லேகம வரை சென்று மாற்று தொடருந்தின் ஊடாக பயணிகள் கொழும்பிற்கு செல்வதாகவும் தொடருந்து கட்டுபாட்டு சபை தெரிவித்துள்ளது.



No comments