கடந்த உள்ளுராட்சித் தேர்தல் பிரசாரத்தின் போது வெளியிட்ட கருத்து தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி ஒருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். புனர்வாழ்வு அளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரான கந்தசாமி இன்பராஜா (வயது 43) என்பவரே பயங்கரவாத விசாரணை பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். தேர்தல் பிரசாரத்தின் போது,தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள், இராணுவ புலனாய்வாளர்களுக்கு அச்சமின்றி தகவல்களை வழங்குவதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியிருந்ததாக கூறப்படுவது தொடர்பிலேயே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. குறித்த பிரசாரம் தொடர்பில் கட்சியின் செயலாளரான ஐயம்பிள்ளை இராஜசேகரன் கடந்தமார்ச் 30ஆம் திகதி அதிகாரிகளால் ஏற்கனவே விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
Post a Comment