கொள்கை அடிப்படையெனில் முன்னணியே பொருத்தமானது!
முதலமைச்சர் புதிதாக கட்சியொன்றை உருவாக்கி ஏனைய கட்சிகளுடன் கொள்கை அடிப்படையில் இணைப்பதற்கு முன்னதாக தமிழ் மக்கள் பேரவையில் உள்ள பொது அமைப்புக்களினை அரவணைத்துக்கொள்ளவேண்டும். அவ்வாறான சூழலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் ஆதரவு வழங்குவது பற்றி பரிசீலிக்கும்.பெரும்பாலும் அது ஆதரவளிக்கின்ற நிலைப்பாடாக இருக்குமென தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியில் நடந்து முடிந்த உள்ளுராட்சி தேர்தலில் மிகப்பெரும் வெற்றியை பெற்றிருப்பதன் மூலம் முன்னணி மக்களிடம் உரிய அங்கீகாரத்தை பெற்றிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக முதலமைச்சர் எத்தகைய தரப்புக்களுடன் எதிர்காலத்தில் இணைவார் என்பது பற்றி அக்கறை கொண்டுள்ளதாக தெரிவித்த அவர் கொள்கை அடிப்படையில் முதலமைச்சர் வெளியேறுவராயின் கொள்கை அடிப்படையில் வெளியில் செயற்படும் தரப்புகளுடன் இணைவதே பொருத்தமானதெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தற்போது இந்தியாவிலுள்ள முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் நாடு திரும்பியதும் கட்சி தொடங்குவது பற்றிய அறிவிப்பினை விடுக்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.
Post a Comment