நெடுந்தீவு சுயேட்சை சிறீதரனின் ஆதவாளரே?
நெடுந்தீவில் கூட்டமைப்பின் வேட்பாளர்களிற்கு போட்டியாக சுயேட்சை வேட்பாளர்களை அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் களமிறக்கியருந்ததனை தாம் அறிந்திருந்ததாக அக்கட்சியின் யாழ்.மாவட்ட நிர்வாக செயலாளர் சிறீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கூட்டமைப்பில் பல கட்சிகள் இருக்கின்றமை எமக்கு தெரியும்.நெடுந்தீவில் டெலோ சார்பில் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டனர். அங்கு சந்தர்ப்பம் கிடைக்காத சிறீதரனின் ஆதரவாளரொருவரே சுயேட்சையாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.அவரது ஆதரவுடனேயே நெடுந்தீவில் கூட்டமைப்பு ஆட்சியை பிடித்துள்ளது.
இடம் கொடுக்காது வெளியே விடுவதும் பின்னர் கதிரை பிடிக்க அவர்களை அரவணைப்பதும் கூட்டமைப்பிற்கு சாதாரணமானது.
ஏன் யாழ்.மாவட்டத்தில் சபைகளை கைப்பற்ற நாம் தேவை. ஆனால் மக்களிடம் ஈபிடிபியிடம் ஆதரவு கேட்டமை பற்றி தெரியக்கூடாதென இரட்டை வேடம் போடுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment