Header Ads

test

கிம் ஜாங் உடனான பேச்சுவார்தை பயன் இல்லையெனில் வெளியேறிவிடுவேன் - டிரம்ப்

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகிய இருவரும் சந்தித்து பேச உள்ளனர். உலகமே உற்று நோக்கும் இந்த சந்திப்பு எங்கு நடக்க போகிறது என்பது இன்னும் தெரியவில்லை.

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். புளோரிடா நகரில் நேற்று இரு தலைவர்களும் சந்தித்து பேசினர். அதன் பின்னர் ஊடகவியாலாளர்களை கூட்டாகச் சந்தித்தனர்.

அப்போது ஊடகவியலாளர்களால் கிம் ஜாங் உடனான சந்திப்பு குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த டிரம்ப், “கிம் ஜாங் உடனான பேச்சுவார்த்தை பலனில்லை எனில் பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறி விடுவேன்” என கூறினார்.

சி.ஐ.ஏ இயக்குநர் மைக் போம்பே சமீபத்தில் வடகொரியாவுக்கு ரகசிய பயணம் மேற்கொண்டு கிம் ஜாங் உன்னை சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியானது. இதனை டிரம்ப் உறுதிப்படுத்தினார். போம்பேவின் பயணம் சிறப்பான ஒன்றாக இருந்துள்ளது என அவர் கூறினார்.

No comments