Header Ads

test

தேசிய அரசாங்கத்தை முன்னோக்கிக் கொண்டுச் செல்ல குழு


தேசிய அரசாங்கத்தை முன்நோக்கிக் கொண்டுச் செல்வதன் பொருட்டான நடவடிக்கைகளை மேற்கொள்ள குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

அமைச்சர் சரத் அமுனுகம தலைமையில் சுதந்திர கட்சியின் ஐந்து உருப்பினர்களைக் கொண்ட இந்த குழு ஜனாதிபதியினால் அமைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் மஹிந்த அமரவீர எமது செய்தி பிரிவிடம் இதனை தெரிவித்தார்.

தேசிய அரசாங்கத்தை முன்னோக்கிக் கொண்டுச் செல்வதன் பொருட்டான கலந்துரையாடல்கள் மற்றும் செயற்பாடுகளை இந்த குழு மேற்கொள்ளும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் இதன்போது தயாரிக்கப்படும் அறிக்கையும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும், மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

No comments