Header Ads

test

வடக்கு உற்பத்திகளுக்கு கனடாவில் அமோக வரவேற்பு!!

வடக்கு மாகாணத்தில் முன்னாள் போராளிகள் மற்றும் மாற்று திறனாளிகளால் சிரட்டை , ஐஸ் கிரீம் குச்சிகள் , கழிவுப் பலகைகளை கொண்டு உருவாக்கப்பட்ட கைப்பணி பொருட்களுக்கு கனடாவில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

குறித்த பொருள்களை கனடாவில் சந்தைபடுத்தி அவர்களுக்கு பொருளாதார ஊக்குவிப்பை வழங்கும் முகமாக ஈழம் பரிசுகள் நிறுவனம்(EELAM GIFT & CRAFT ) சில பொருள்களை இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகிறது. இதனைப் பலர் ஆர்வத்துடன் கொள்வனவு செய்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது.

No comments