அமைச்சரவை மறுசீரமைப்பின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு வெளிவிவகார அமைச்சைப் பொறுப்பேற்குமாறு அரசாங்க தரப்பிலுள்ள சிலர் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர். இருப்பினும், இந்த வேண்டுகோளை விஜேதாச எம்.பி. நிராகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. ஏற்கனவே இந்த அரசாங்கத்தில் நீதி அமைச்சராக பதவி வகித்த விஜேதாச ராஜபக்ஷ, தனக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரவுள்ளதாக அறியப்பட்டவுடன், இராஜினாமா செய்தார். இருந்தும், அவர் தொடர்ந்தும் ஐ.தே.க.யிலிருந்து விலகவில்லை. பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையிலும் பிரதமருக்கு ஆதரவாக வாக்களித்திருந்தார். தற்பொழுது வெளிவிவகார அமைச்சை திலக் மாரப்பன வகித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது
Post a Comment