Header Ads

test

ஐ.நா தொழிலாளர் காரியாலயத்தில் இலங்கை ஆசிரியர் சங்கம் முறைப்பாடு!

சர்வதேச தொழிலாளர் தின கொண்டாட்ட தினம் மாற்றப்பட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்து ஐ.நா தொழிலாளர் காரியாலயத்தில் இலங்கை ஆசிரியர் சங்கம் முறைப்பாடு செய்துள்ளது.
விசாக பூரணை வாரத்தை முன்னிட்டு, பௌத்த மகாசங்கத்தினர் விடுத்த கோரிக்கைக்கு அமைய, சர்வதேச தொழிலாளர் தினத்தை மே மாதம் 7 ஆம் திகதி கொண்டாட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த விடயமானது தொழிலாளர்களின் உரிமைகளில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்து ஆசிரியர் சங்கம் முறைப்பாடு செய்துள்ளது.

No comments