Header Ads

test

சவுதி மன்னரின் மாளிகைக்கு மேல் பறந்த ஆளில்லா விமானம்!

சவுதி மன்னரின் மாளிகைக்கு மேலால் விமானியில்லாத சிறிய ரக விமானமொன்று பயணித்துக் கொண்டிருந்ததாகவும், விரைந்து செயற்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் அதனை சுட்டு வீழ்த்தியதாகவும் சவுதி செய்திச் சேவை அறிவித்துள்ளது.

நேற்று (21) இரவு 8.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த விமானத்தை மன்னரின் மாளிகைக்கு மேலால் செலுத்தியவர்கள் யார் என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விமானம் மன்னரின் மாளிகைக்கு மேலால் பறந்த போது மன்னர் மாளிகையில் இருந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. 

No comments