Header Ads

test

இலங்கை அரசின் அறிவிப்புகளை மீறி மே முதலாம் திகதியே மேதினமாகும்!

இலங்கை அரசின் அறிவிப்புகளை மீறி மே முதலாம் திகதி தொழிலாளர் தினக் கொண்டாட்டங்களினை தமிழ் அரசியல் கட்சிகளை தொடர்ந்து தென்னிலங்கை கட்சிகளும் மேற்கொள்ள முற்பட்டுள்ளன. இதனிடையே மே முதலாம் திகதி தொழிலாளர் தினக் கொண்டாட்டங்களில் ஈடுபடுவது சட்டரீதியாகத் தடைசெய்யப்படாத நிலையில், அன்று நடைபெறும் கூட்டங்களுக்கு காவல்துறை எந்தவித இடையூறுகளும் ஏற்படுத்தப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை காவல்துறையின் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர,  இதனைத் தெரிவித்துள்ளார்.

எனினும், மே மாதம் முதலாம் திகதி இலங்கையின் வெசாக் தின நிகழ்வுகளுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில், வீதிகளில் போக்குவரத்துத் தடை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டால், அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்பவை மே முதலாம் திகதியே மே தினக்கொண்டாட்டங்களினை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது தெரிந்ததே

No comments