Header Ads

test

கவனத்தை ஈர்த்த வல்வை முத்துமாரி ஆலய இந்திர விழா!

வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் மகோற்சவ தீர்த்த் திருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (29)  மிகச் சிறப்பாக நடைபெற்றது.

அத்துடன் இரவு இந்திர விழாவும் முன்னெடுக்கப்பட்டது. 3 கிலோ மீற்றர் தூரத்திற்கு வீதிகள் மற்றும் ஆலய வளாகம் உட்பட அப்பகுதி முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, 10 மேற்பட்ட மேடைகள் போடப்பட்ட இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.

இந்திரவிழாவில் மின் அலங்காரங்கள், கடவுள்களின் பொிய பதாதைகள், புகைக்கூடுகள் வானில் செலுத்தியமை, சிலைகள் உருவங்கள் என்பன மக்களை மிகவும் கவர்ந்துள்ளன.

10 மேற்பட்ட மேடைகளில் ஒவ்வொன்றிலும் இசை நிகழ்ச்சிகள், மேளக் கச்சோிகள், பட்டிமன்றங்கள், நடன நிகழ்வுகள் அரகேற்றப்பட்டன.

நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.

No comments