உள்ளூராட்சி சபைகளின் ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகள் இன்றுடன் (20) நிறைவடைவதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் 20 ஆம் திகதி முதல் உள்ளுராட்சி சபைகளின் ஆட்சியமைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. இரண்டு உள்ளூராட்சி சபைகள் தவிர ஏனைய அனைத்து உள்ளூராட்சி சபைகளினதும் ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன. அமர்வுகள் பிற்போடப்பட்ட ஹம்பாந்தோட்டை மாநகர சபை மற்றும் உறுப்பினர்கள் எண்ணிக்கையை வர்த்தமானியில் வௌியிட தாமதமான பூஜாபிட்டிய பிரதேச சபை ஆகியவற்றின் ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகள் இதுவரை இடம்பெறவில்லை எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அந்த இரு சபைகளுக்கும் மேலதிகமாக இரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பதாகவும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.
Post a Comment