Header Ads

test

இந்தியாவின் புதிய ஆட்கடத்தல் சட்டம்: எப்போது நடைமுறைக்கு வரும்?

இந்தியாவில் நிகழும் ஆட்கடத்தல் நடவடிக்கைகளை தடுப்பதற்கான புதிய மசோதா நாடாளுமன்றத்தில் மத்திய அரசு முன்வைத்துள்ள நிலையில், அதன் முக்கிய அம்சங்கள் குறித்தும், ஏன் இச்சட்டம் முன்வைக்கப்படுகின்றது என்பதை பற்றியும் அறிந்து கொள்வது அவசியமாகின்றது.

இந்தியாவில் ஆட்கடத்தல்

*அரசின் கணக்குள் படி, 2012 முதல் 2017 வரை 3 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் காணாமல் போகியுள்ளனர்.

*இதில் 2016 ஆம் ஆண்டு மட்டும் 111, 569 குழந்தைகள் போகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 55,944 குழந்தைகள் கண்டறியப்பட்டாலும், 8,132 ஆட்கடத்தல் வழக்குகள் மட்டுமே பதியப்பட்டுள்ளன. 

*இப்படி கடத்தப்படும் குழந்தைகள் நவீனக்கால அடிமைத்தனமாக பார்க்கப்படும் பாலியல் தொழில், வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

*மேற்கு வங்காளம், ஒடிசா, பீகார், ஜார்கண்ட் மாநிலங்களைச் சேர்ந்த பல இளம்பெண்கள் வறுமை, வாய்ப்புகளற்ற சூழல் காரணமாக பாலியல் தொழிலில் அதிகமாக ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இச்சட்டம் முன்வைப்பது என்ன?

*இவ்வாறான ஆட்கடத்தல் பிரச்னைகளை கையாளுவதற்கான சட்ட வழிகள் இன்னும் குழப்பத்துக்குரியதாகவே இருந்து வருவதால், ஆட்கடத்தல் பிரச்னைகளை பிரத்யேகமாக கையாளுவதற்கான சட்டம் அவசியம் என கருதுகின்றது மத்திய அரசு. அதனடிப்படையில் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள சட்டம், கடத்தப்பட்ட ஒரு நபரை குற்றவாளியாக பார்ப்பதை தவிர்த்து பாதிக்கப்பட்டவராக அணுகுகின்றது. 

*ஆட்கடத்தலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வை வலியுறுத்துகின்றது.

*ஆட்கடத்தல் விவகாரங்களில் தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ. மற்ற நாடுகளுடன் இணைந்து செயல்படவும் முதல் முறையாக இடமளிக்கின்றது. 

*வீட்டு வேலைகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் நிறுவனங்கள் முறையாக பதிவு செய்திருக்க வேண்டும். 

இந்த சட்டம் நடைமுறைக்கு வருவது ஏற்கனவே உள்ள சட்ட நடைமுறைகள் தொடர்பாக குழப்பத்தை விளைவிக்கும் என்ற கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன. அதே சமயம், இச்சட்டம் எல்லைக் கடந்து வரும் அகதிகள் மீது தாக்கங்களைச் செலுத்தக்கூடும் என்ற விமர்சனமும் வைக்கப்பட்டுள்ளது. 

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தொடர்ந்து வந்த அமளிக்காரணமாக நாடாளுமன்றம் முடங்கிய நிலையில், இந்த மசோதா சட்டமாக நிறைவேறுவதிலிருந்து காலத்தாமதமாகி வருகின்றது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இதற்கு சம்மதம் தெரிவித்தவுடன் ஆட்கடத்தல் தொடர்பான புதிய மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமாக நடைமுறைப்படுத்தப்படும். 

No comments