Header Ads

test

மகாவலி அதிகார சபைக்கு நியமனங்கள்


இலங்கை மகாவலி அதிகார சபைக்குப் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள 147 உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், நாட்டின் அபிவிருத்திக்காகவும் மக்களின் நலனுக்காகவும் இலங்கை மகாவலி அதிகார சபை எதிர்பார்க்கும் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக புதிய உத்தியோகத்தர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.
மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அனுர திசாநாயக்க, இலங்கை மகாவலி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம், ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சரத் சந்ரசிறி விதான உள்ளிட்ட பணிப்பாளர் சபையினர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்

No comments