பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன், தோற்கடிக்கும் முயற்சியில் இறங்கக் கூடாது என்று ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை விடுத்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன், சிறிலங்கா பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிக்கும் முயற்சியில் இறங்கக் கூடாது என்றும், அது எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் ஐதேகவினரிடம் சிறிலங்கா அதிபர். எச்சரித்துள்ளார். கூட்டமைப்பின் ஆதரவைப் பெறுவது, பொதுமக்களுக்கு தவறான தகவலை கொண்டு செல்லும் என்றும் அவர் கூறியுள்ளார். சிறிலங்கா அதிபரின் இந்தக் கருத்து தொடர்பாக ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். இந்தக் கட்டத்தில், 2015 அதிபர் தேர்தலில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெற்றுக் கொண்டதை, அமைச்சர் மங்கள சமரவீர நினைவுபடுத்தியுள்ளார்
Post a Comment