Header Ads

test

நாளை மறுநாள் காலை பதவியேற்கிறது சிறிலங்காவின் புதிய அமைச்சரவை

சிறிலங்காவின் புதிய அமைச்சரவை நாளை மறுநாள் காலை 10 மணியளவில் பதவியேற்கவுள்ளது. சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இந்த அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது.

புதிய அமைச்சரவையின் முதலாவது கூட்டம், அநேகமாக அன்று மாலை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய அமைச்சரவை நியமனம் தொடர்பாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், நேற்று முன்தினம் மாலை  நீண்டநேரம் பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.

இதன்போதே, புதி அமைச்சரவை பதவியேற்பு தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்தப் பேச்சுக்களில் சிறிலங்கா பிரதமருடன், அமைச்சர் மலிக் சமரவிக்ரமவும் கலந்து கொண்டார்.

No comments