சிறிலங்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில பாதுகாப்புத் துறையில் பரந்துபட்ட ஒத்துழைப்பும், நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்வதும் அவசியம் என்று பாகிஸ்தான் பிரதமர் சாஹிட் கான் அப்பாசி தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க நேற்று பாகிஸ்தான் பிரதமரை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இதன் போதே அவர் இரண்டு நாடுகளுக்கும் இ.டையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலியுறுத்தியுள்ளார். ‘பிராந்தியத்தில் அமைதி நிலவுவதை இரண்டு நாடுகளும் விரும்புகின்றனர். சிறிலங்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் உள்ள பாதுகாப்பு ஒத்துழைப்பு திருப்தியளிக்கிறது.’ என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, பாதுகாப்புத் துறையில் பாகிஸ்தானுடன் மேலும் உறவுகளைப் பலப்படுத்துவதில் சிறிலங்கா ஆர்வம் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Post a Comment