மாநகரசபைக்கு புதிய கட்டடம்,ஆனோல்ட் சபதம்!
முன்னாள் ஆளுநர் சந்திரசிறி,டக்ளஸ்,பஸில் ராஜபக்ச,யோகேஸ்வரி பற்குணத்தை தொடர்ந்து மாநகர புதிய கட்டடத்தொகுதியை கட்டியெழுப்ப போவதாக புதிய முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார்.
மாநகர சபைக் கட்டடத்துக்கென ஒதுக்கிய நிதி கிடைக்கும் பட்சத்தில் கட்டடம் அமைப்பதுக்கான பூர்வாங்க வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த மாநகர சபை தயாராக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தில் அழிக்கப்பட்ட மாநகர சபைக் கட்டடத்தை கட்டுவதுக்கு நகர அபிவிருத்தி அமைச்சினால் 1000 மில்லியன் ரூபாய் நிதி தருவதாக உறுதியளித்திருந்தனர். கட்டடத்தின் வேலைத்திட்டங்களை நிறைவேற்றுவதுக்கு 1800 மில்லியன் ரூபாய் தேவை என உத்தேசிக்கப்பட்டுள்ளது.
நகர அபிவிருத்தி அமைச்சு 1000 மில்லியன் ரூபாய் நிதியும், வடமாகாண சபை 500 மில்லியன் ரூபாயும், ஏனைய 300 மில்லியன் ரூபாயை மாநகர சபையும் பொறுப்பேற்குமென்ற வகையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
குறித்தொதுக்கப்பட்ட நிதிகளை, நகர அபிவிருத்தி அமைச்சும், வடமாகாண சபையும் வழங்குமிடத்து, கட்டடத்தை 2 வருடங்களில் நிறைவு செய்யலாம்.
இருப்பினும் இடையில் ஏற்பட்ட அரசியல் சலசலப்புக் காரணமாக, மாநகர சபை கட்டட வேலைத்திட்டங்கள் கிடப்பில் இருப்பதாக பொறுப்பேற்ற பின் அறிந்துள்ளேன்.
\
கட்டடத்துக்கான பூர்வாங்க வடிவமைப்பைச் செய்த பின்னர் நகர அபிவிருத்திச் சபை கூறிய உத்தரவாதத்தை வழங்கும் பட்சத்தில், மாநகர சபைக் கட்டடத்துக்கான ஆரம்ப பணிகளை ஆரம்பிக்க முடியும். நகர அபிவிருத்திச் சபை உத்தரவாதத்துக்கு அமைவாக மாநகர சபைக் கட்டடத்துக்கான வேலைத்திட்டங்கள் மிக விரைவில் ஆரம்பிக்கப்படுமென்றும்” அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment