Header Ads

test

சிங்கள நியமனம் அமைச்சருக்கே தெரியாதென்கிறார் சுமந்திரன்


வடக்கு மாகாணத்துக்கு நியமிக்கப்பட்ட சமுர்த்தி திணைக்களத்தின் சிங்களச் சிற்றூழியர்கள் அமைச்சர்கள் மாற்றத்தால் நடந்திருப்பதாக விளக்கமளித்துள்ளார் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.


இதேவேளை அவர்கள் தென்னிலங்கைக்கு மீள அழைக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மான விடயத்தை தொடர்ந்து, சமூக வலுவூட்டல் அமைச்சராக இருந்த எஸ்.பி.திசநாயக்க பதவி விலகியிருந்தார். அவர் பதவி விலகிச்செல்வதற்கு சில தினங்களுக்கு முன்னர் 300 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இவர்களில் 190 பேர், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்காவின் தொகுதியைச் சேர்ந்தவர்கள். இந்த நியமனங்கள் தொடர்பாக ஆராயப்படும் அதேவேளை, வடக்கு மாகாணத்திற்கு அனுப்பப்பட்ட சிங்கள சிற்றூழியர்களை மீள அழைக்குமாறு அமைச்சர், செயலருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

No comments