அரசாங்கம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ள ஊழல் எதிப்புச் சட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதாயின் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாக குழுவொன்று தம்மிடம் தெரிவித்ததாக பிரதி அமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்தார். அக்குழு யார் என்பதை வெளியிட முடியாது எனவும் அது ஐ.தே.கட்சியினர் அல்லவெனவும் அவர் குறிப்பிட்டார். இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு அரசாங்கத்திலுள்ள யாராவது ஆதரவு தெரிவித்து வாக்களிப்பதாயின் அவருக்கு அரசாங்கத்தில் இருக்க முடியாது. ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள யாராவது இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு தெரிவிப்பார்களாயின் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு கட்சியிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதி அமைச்சர் மேலும் கூறினார்
Post a Comment