Header Ads

test

அதிரடிப்படையின் பாதுகாப்பு வளையத்துக்குள் நாடாளுமன்றம்!


நாடாளுமன்ற பகுதியில் நாளை விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து நாளை நாடாளுமன்றில் விவாதமும் வாக்கெடுப்பும் நடத்தப்பட உள்ளது. இந்த நிலையில், நாளை நாடாளுமன்றையும் அதனை அண்டிய பகுதிகளிலும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார். பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் கலகத் தடுப்பு பொலிஸார் ஆகிய தரப்புக்கள் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாக தங்களது வாக்குகளை அளிப்பதற்கு தேவையான பின்னணி உருவாக்கிக் கொடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் நாடாளுமன்றிற்கு தடையின்றி வருவதற்கு தேவையான ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதற்கு மேலதிகமாக நாடாளுமன்றிற்கு உள்ளேயும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

No comments