பதவியேற்றதன் பின்னரும் சொத்து விபரங்களை வௌியிடாத அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு விதிக்கப்படும் தண்டப்பணத்தை அதிகரிப்பதற்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதுவரை அறவிடப்பட்ட ஆயிரம் ரூபா தொகையை ஒரு இலட்சம் ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நெவில் குருகே குறிப்பிட்டுள்ளார். குறித்த தண்டம் தொடர்பான திருத்தம் செய்வதற்கான பரிந்துரைகள் தற்போது அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தாம் பதவிக்கு வரும் முன்னரும் பதவியில் அமர்ந்த பின்னரும் ஏற்படும் சொத்து மாற்றங்களை வைத்து லஞ்சம் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளாரா என்பதை கண்டு கொள்வதற்கு பல்வேறு சட்ட ஏற்பாடுகள் காணப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment